இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொரளை தெற்கு கிராம சேவகர் பிரிவின் கிராம
உத்தியோகத்தரை ரூ 50,000/- ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 23.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
பொரளை தெற்கு கிராம சேவகர் பிரிவின் வாக்காளர் பட்டியலில் முறைப்பாட்டாளரின் மற்றும் அவரது மனைவியின் பெயர்களை உள்ளடக்குவதற்காக 50,000/- ரூபாவினை இலஞ்சம்ஆக கோரிப் பெற்றுக்கொண்டபோதே சந்தேக நபர் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.