ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் அக்டோபர் 2003 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 14 டிசம்பர் 2005 ஆம் திகதி முப்பது நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் குறித்த சமவாயம் நடைமுறைக்கு வந்தது.
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் இச் சமவாயத்தின் பங்காளிகளாக இருப்பதுடன், 2004 மார்ச்சில் இச் சமவாயத்தில் அங்கம் வகிக்கும் முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். ஊழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும் ஊழலைத் தவிப்பதற்கும் டிசம்பர் 9 ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பொதுச் சபை அறிவித்துள்ளது.
இவ்வருட சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து நேர்மையான உத்தியோகத்தர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வை 2022 டிசம்பர் 9 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
30.11.2022 ஆம் திகதி வரை ஊழல் தடுப்பு பிரிவு 125 இற்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தியுள்ளது அவற்றில் நாடளாவிய ரீதியில் 60 இற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காகவே நடாத்தப்பட்டுள்ளது.
தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, தேசிய செயற்திட்டத்துடன் வெளியிடப்பட்ட நேர்மைக்
கையேட்தின் அடிப்படையில் ஒவ்வரு அரச நிறுவனங்களுக்கும் நேர்மையான உத்தியோகத்தர் ஒருவரை இவ்வூழல் எதிர்ப்பு தினத்தில் நியமிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 60 பிரதேச செயலகங்களில் ஒரு காரியாலயத்திற்கு ஒரு நிறைவேற்று உத்தியோகத்தருக்கு நேர்மையான உத்தியோகத்தராக நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதே தினத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர்
நாயகத்தினால் "நேர்மை போர்ட்டல்" என்ற மின்-இதழ் ஆரம்பித்துவைக்கப்பட்டது இச் சிறப்பு நிகழ்வுக்காக கௌரவ ஆணையாளர் III திரு நிமல் சந்திர வகிஷ்ட அவர்களால் தொடக்க உரை நிகழ்த்தப்பட்டது. (UNDP) நிறுவனத்தின் ஒரு பிரதிநிதி ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை வழங்கினார் இது நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் மீதான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதில் பங்கேற்ற இருவருக்கு ஊழலற்ற அரசுக்கான பொறுப்பு குறித்து உரை நிகழ்த்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ ஆணையாளர்களான ஈவா வனசுந்தர (தவிசாளர்), தீபாலி விஜேசுந்தர,(ஆணையாளர் II), நிமல் சந்திர வகிஷ்ட (ஆணையாளர் III), பணிப்பாளர் நாயகம் தமித் விஜேரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.