இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய , சபுகஸ்கந்த காவல்துறை நிலையத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவரை 100,000 ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 02.06.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
முறைப்பாட்டாளரான ஆரோக்கிய பியூட்டி ஹெர்பல் ஃபுட் ஸ்பா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடமிருந்து 100,000/- ரூபாவினை இலஞ்சம்ஆக கோரிப் பெற்றுக்கொண்டபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலஞ்சமானது எந்தவொரு தலையீடும் இல்லாமல் ஸ்பா நிறுவனம் அதன் வணிகங்களை மேற்கொள்ள அனுமதிப்பதற்காகவும், எதிர்காலத்தில் ஸ்பாவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும் பெறப்பட்டது குறித்த விடயம் கடவத்த காவல்துறை நிலைய காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது சந்தேகநபர் ராகம - கடவத்த வீதி, ஸ்ரீலங்கா டெலிகொம் முன்பாக வைத்து இலஞ்சம் பெற்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.