ரூபாய் 50,000.00 இலஞ்சமாகப் பெற்ற பிரிவு வன அலுவலர் கைது

சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொரான பிரிவு வன அலுவலகத்தில் கடமையாற்றும் பிரிவு வன அலுவலகர் 50000.00 ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் 2023.11.09ம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பக்மிடியாவத பிரதேசத்தில் ரதுகலயாய என்ற இடத்தில் முறைப்பாட்டாளரும் அவரது மச்சானும் 2005ம் ஆண்டு முதல் செய்து வருகின்ற சேனைப்பயிர்ச்செய்கையை பரிசோதிப்பதற்காக வந்த மேற்கூறிய அலுவலர், அரச நிலத்தில் அனுமதியின்றி சேனைப்பயிர்ச்செய்கை செய்வதாக குற்றம் சுமத்தி அவர்கள் இருவரையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து உத்தரவாதப்பத்திரங்கள் இரண்டில் கையொப்பம் வாங்கியதுடன், அந்த இரு நிலப்பகுதிகள் தொடர்பாகவும் வழக்கு தொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முழு நிலத்திற்குமாக வழக்குத் தொடுத்தால் பாரிய தண்டப்பணமொன்றை செலுத்த வேண்டும் என்பதால் தண்டப்பணத்தை குறைப்பதற்காக 1ஃ4 ஏக்கர் வீதம் வழக்கு தொடர்வதாகவும் பயிர்ச்செய்கையை இந்தப் பருவத்தில் தொடர்ந்தும் மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டு, இதனை செய்து தருவதற்காக ஒருவரிடமிருந்து தலா 25000.00 ரூபாய் வீதம் மொத்தம் 50000.00 ரூபாய் இலஞ்சமாக பெறும் போது மொரான பிரிவு வன அலுவலகத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search