லபுகலே பிரதேசத்தைச் சேர்ந்த பேரூந்து உரிமையாளர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, முப்பதாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின், நுவரெலிய மாவட்ட அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் 2024.02.20 அன்று 10.10 மணியளவில் அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.
முறைப்பாட்டாளரால் கொள்வனவு செய்யப்பட்ட பேரூந்தின் சாலை அனுமதிப்பத்திரத்தை, முறைப்பாட்டாளரின் பெயரிற்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அந்த பேரூந்து வகுப்பை மாற்றி அரச கட்டணங்கள் குறையும் படி செய்வதற்கும், குறித்த நிதி நிறுவனமொன்றிற்கு கடிதமொன்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் 30000.00 ரூபாயை இலஞ்சமாக பெறுதல் மற்றும் அதற்கு ஆதரவளித்தல் முதலாவது சந்தேக நபரான மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின், நுவரெலிய மாவட்ட அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். அதே வேளை குறித்த பணத்தொகையை முகாமைத்துவ உதவியாளர் ஊடாக கேட்டுப் பெற்றமை இரண்டாவது சந்தேக நபரான அவ்வதிகார சபையின் நுவரெலிய மாவட்ட முகாமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.