தம்மை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளாக காட்டிக்கொண்ட சில நபர்களால் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த முறைப்பாட்டாளரிடம் அவருக்கெதிரான விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி அவரது வீட்டில் இருந்து ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய் மற்றும் 3500 டொலர் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வீட்டின் பணியாளரான இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்கு உதவுவதாகவும் கடவுச்சீட்டை மீள வழங்குவதாகவும் கூறி 4 கோடி ரூபாய் இலஞ்சம் கேட்டு அதில் 1 கோடியை வாங்கும் போது ஒரு பெண் உட்பட 4 சந்தேக நபர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் 2024.04.29 அன்று குறித்த அவ்வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.