எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 200,000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட், பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கொட்டாவ சந்திக்கு அருகில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் 05.08 அன்று பிற்பகல் 7.25 – 8.35க்கு இடைப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டனர்.
முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளை பொலிஸ் பொறுப்பில் எடுத்து, அம்மோட்டார் சைக்கிள் மூலம் போதைப்பொருள் கடத்துவதாக வழக்குத் தொடுக்கப்போவதாக பயமுறுத்தி, அவ்வாறு வழக்குத் தொடுக்காதிருப்பதற்கும் மோட்டார் சைக்கிளை மீண்டும் முறைப்பாட்டாளருக்கே வழங்குவதற்கும் மூன்று இலட்சம் ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதில் 70000.00 ரூபாயை அவ்விடத்திலேயே பெற்றுக்கொண்டுள்ளனர். மீதிப்பணத்தில் 200000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற முயன்ற போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.