உஸ்வெடிகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ குறித்த முறைப்பாட்டாளரின் பெயர் ‘யூக்திய’ நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருள் விற்பவர்கள் பட்டியலில் இருப்பதாகவூம்இ முறைப்பாட்டாளரின் பெயரை குறித்த பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவூம்இ முறைப்பாட்டாளரின் வீட்டை அடிக்கடி பரிசோதனை செய்யாதிருப்பதற்காகவூம் மற்றும் முறைப்பாட்டாளரை இனிமேல் தொந்தரவின்றி வாழ்வதற்கு இடமளிப்பதற்காகவூம் வேண்டி 150இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மஹபாகே பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் இணைப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 2024.08.02 அன்று பிற்பகல் 2.42 அளவில்இ வத்தளைஇமஹபாகே நீதிமன்றத்தின் வாகன தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள பாதையில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.