கொழும்பு 5 பிரதேசத்தை சேர்ந்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ 2024 சனாதிபதித் தேர்தலில் எக்சத் லங்கா பொதஜன கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக 30 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெறல் மற்றும் அதற்கு ஆதரவளித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் எக்சத் லங்கா பொதஜன கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் நபர்கள் உள்ளிட்ட 8 பேர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் 2024.08.14 அன்று பிற்பகல் 2.10 அளவில் வெலிகட பிளாசா கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள குறித்த கட்சியின் முன்னால் செயலாளரின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.