பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, குத்தகை முறையில் 3 குத்தகை நிறுவனங்கள் மூலமாக அவர் பெற்ற பஸ் வண்டிகளின் குத்தகைக்காலம் முடிவடைந்ததும் குறித்த பஸ் வண்டிகளின் பூரண உரிமையினை அவரது பெயரில் மாற்றித்தருவதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாள் ஒருவர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் தரகர் ஒருவர் 2024.10.04 அன்று பிற்பகல் 3.30 அளவில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் பின்வருமாறு.
- முதல் குற்றவாளியான தரகர், (வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் கடமையாற்றி இலஞ்சக் குற்றச்சாட்டில் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தொழிலாளியொருவர்) 50000.00 ரூபாயை முற்பணமாக பெற்றதுடன். மீதி 150000.00 ரூபாயினை அதிகாரிகளுக்கு வழங்கவென கேட்டுப் பெற்றமை.
- இரண்டாவது சந்தேக நபரான அபிவிருத்தி உதவியாளர், முதலாவது சந்தேக நபரூடாக 50000.00 ரூபாயை கேட்டுப்பெற்றதுடன், மிகுதி 150000.00 ரூபாயையும் சந்தேக நபரிடமிருந்து கேட்டுப் பெறல்
- மூன்றாவது சந்தேக நபரான பிரதி ஆணையாளர் இரண்டாவது சந்தேக நபர் ஊடாக 150000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டல் மற்றும் தரகருக்கு இலஞ்சத்தை பெற உதவுதல், தூண்டுதல் மற்றும் சதியில் ஈடுபடல்