கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவஹெட்ட பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிரிமெடியாவத்தை காணியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான அரச பணிகளை மேற்கொள்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டு 350,000.00 இலஞ்சக் கோரிக்கை விடுத்ததாக கடவத, கோனஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மூலம் பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காக காணியினை கொள்வதற்குரிய அரச பணிகளை முன்னெடுத்து தருவதாக கூறி மேற்படி 350000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தலத்துஓயா பிரதேசத்தினை சேர்ந்த இடைத்தரகரான சிவிலியன் ஒருவர் 11.12.2024 அன்று காலை 11.30 மணியளவில் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.