கோனகொல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அம்பாறை வன அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும முதலாம் சந்தேகநபரான வட்டார வன உத்தியோகத்தர் ரூ. 40,000/= மற்றும் இரண்டாவது சந்தேக நபரான வனகள உதவியாளர் ரூ. 60,000/=இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்; 2024.12.08 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால்; கைது செய்யப்பட்டனர்.
முதல் சந்தேக நபர் பி.ப 4.15 மணியளவில் முறைப்பாட்டாளர் வசிக்கும் வீட்டுக்கு அருகில் வைத்தும் இரண்டாவது சந்தேக நபர். பி.ப 7.10 மணியளவில் முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ள கடையொன்றிற்கு அருகில் வைத்தும் கைதுசெய்யப்பட்டதோடு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.