தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் முறைப்பாட்டாளர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் பணத் தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்து முறைப்பாட்டாளருக்கு வழங்க வேண்டிய பணத்தை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துத்தருவதாக கூறி 2024.12.23 அன்று இலஞ்சமாக ரூபா. 5,000.00 இனை கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் அன்று பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவில் பணிபுரியும் சமூக பொலிஸ் பிரிவிற்கு விடுவிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் குறித்த தினத்தில் பி.ப 2.13 மணியளவில் திருகோணமலை பொலிஸ் நிலைய அலுவலர்கள் உணவு உண்ணும் இடைவேளை அறைக்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.