அரசாங்க தொழிலை வழங்குவதாகக் கூறி, முறைப்பாட்டாளரிடமிருந்தும் ஏனைய மூவரிடமிருந்தும் ரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் திறந்த விசாரணைக்குப் பிறகு, 13.03.2025 அன்று காலை 7.30 மணியளவில் குட்டிகல, படலங்கல பகுதியில் இரண்டு பொதுமக்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், முதல் சந்தேக நபர் 19.03.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபர் தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.