வரகாபொல பிரதேச சபையின் முன்னால் தவிசாளரான போபே ஆரச்சிலாகே சந்தன கீர்த்திசிரி விஜேதுங்க என்பவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மூலம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வழக்குகளின் இலக்கங்கள் வருமாறு 60483/2016, 60484/2016, 60485/2016, 60486/2016.
இங்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மூலம் மேற்படி பெயர்குறிப்பிட்ட எதிராளிக்கு எதிரான குற்றமாவது திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தலை வழங்கத் தவறியமையாகும். மேற்படி எதிராளி மேற்படி நான்கு குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக் கொண்டார். கௌரவ நீதிவான் எதிராளியை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்ததுடன் ஒவ்வொரு வழக்கிற்கும் வெவ்வேறாக ரூபா 1000.00 வீதம் தண்டப்பணம் விதித்ததுடன் அதனை செலுத்தத் தவறின் ஒரு வழக்கிற்கு தலா 03மாதங்கள் வீதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.