மகாவலி அதிகாரசபையின் கல்கிரியாகம பிரிவு முகாமையாளராக பணிபுரிந்த ஏ. எம். உபாலி திசாநாயக்க என்பவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களின் மூலம் 5 வருட கடூழிய சிறை, ரூபா 10,000.00 தண்டம், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு 200,000.00இழப்பீடு வழங்குமாறு விதித்துத் தீர்ப்பு.
மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்கள் மேற்படி தீர்ப்பினை குறித்த குற்றவாளி முறைப்பாட்டாளரிடம் ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்டமைக்குரிய தண்டனையாகவே மேற்படி தீர்ப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.