ஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பொது சபையின் உயர் நிலை விவாதத்தில் இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான

uncsஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பொது சபையின்  உயர் நிலை விவாதத்தில்  இலங்கையின் இலஞ்சம்  அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  திரு. சரத் ஜயமன்னே அவர்களின் உரை.வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் மாநாட்டின் செயல்பாட்டை திறம்பட ஊக்குவித்தல்

2018 மே மாதம் 23ஆம் திகதிநியூயார்க்>அமெரிக்காஉயர் நிலை பிரிவுமு.ப 10:30-மு.ப 11:15


கௌரவ தலைவர் அவர்களே.புகழ்பெற்ற நாடுகளின்  பிரதிநிதிகளே.ஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இம்மாநாட்டில் நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்பதனை கூறவேண்டும். ஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயம் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊழலுக்கெதிரான  சட்டக்கட்டமைப்பை வழங்குகிறது. ஊழலுக்கெதிரான  தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள அனைத்து மட்டங்களிலும் அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் இலக்காகக் கொண்டு ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை ஒரு முழுமையான அணுகுமுறையை கடைபிடித்துள்ளது. ஆகவே>மாநாட்டின் விதிகள் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையர்களாகிய நாம் உறுதி பூண்டுள்ளோம்.  ஜனநாயகம்>நல்லாட்சி>நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் 2015 இல் பதவிக்கு வந்த புதிய நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட  முதல் நடவடிக்கைகளில் ஒன்று  அரசியலமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட  பத்தொன்பதாவது திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த திருத்தமானது நீதிச்சேவைகள் ஆணைக்குழு>தேசிய பொலிஸ் ஆணைக்குழு>பொதுச் சேவை ஆணைக்குழு>மனித உரிமைகள் ஆணைக்குழு>தேர்தல் ஆணைக்குழு>நிதி ஆணைக்குழு>கணக்காய்வ ஆணைக்குழுக்களுடன் நான் பணிப்பாளர் நாயகமாக இருக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு முதலான சுயாதீன ஆணைக்குழுக்களை எவ்வித தலையீடுகளுமின்றி செயற்பட களம் அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலைமையானது ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்கை அளித்ததுடன் ஊழலுக்கு எதிரான புதிய அமைப்புக்களையும் உருவாக்கிக் கொண்டு ஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. கௌரவ தலைவர் அவர்களே> நான் உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கியமானதோர் விடயம் யாதெனில், கடந்த மாதம்>எமது ஆணைக்குழுவானது (CIABOC)இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய  உயர்மட்ட அதிகாரிகள் இருவரினை கைது செய்தமை. இது ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை நிரூபித்ததுடன் நாம் எவ்வித தலையீடுகளுமின்றி செயற்படுவதற்கான வாய்ப்புக்களை வழங்கிய அரசாங்கத்தின் தலையிடாக் கொள்கையையும் வெளிப்படுத்தும் சான்றாக மிளிர்கின்றது எனலாம். இந்தக் கைதுகள் ஊழலுக்கு எதிரான எங்கள் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பதிவாகியதுடன் கடந்த 60 ஆண்டுகளில் இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கைதாகவும் பதிவாகியுள்ளதுடன் ஆணைக்குழுவானது ஊழலுக்கு எதிரான அதனது செயற்பாடுகளை எவ்விதமான தடைகள்>தலையீடுகள் இன்றி சுயாதீனமாக முன்னெடுத்து வருகின்றமையை நீருபணமாக்கியுள்ளது எனலாம்.   கௌரவ தலைவர் அவர்களே UNODC இன் நாடுகள் தொடர்பிலான மீளாய்வுப் பொறிமுறை எங்கள் எதிர்பார்ப்புக்கள்  நிறைவேற பங்களித்துள்ளமையையிட்டு நாங்கள் பெரிதும்  மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில்>இது குற்றவியல் தடுப்பு நிவாரணம்  மற்றும் குற்றவியல் நீதியுடன் தொடர்புடைய ஏனைய ஒப்பந்தங்களுக்கான பொன்னான சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது எனலாம்.  ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் அத்தியாயம் III இன் அமுற்படுத்துகை (குற்றவியல்) மற்றும் அத்தியாயம் IV (சர்வதேச ஒத்துழைப்பு) தொடர்பிலான மீளாய்வு 2003 இன் மூலம் நிறைவு செய்யப்பட்டது. இரண்டாம் அத்தியாய மீளாய்வானது தடுப்பு நிவாரணம் மற்றும் ஐந்தாவது அத்தியாயம்  (சொத்து மீட்பு) தொடர்பிலான  இலங்கையின் சுய மதிப்பீட்டு மீளாய்வானது கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.  இரண்டாம் மதிப்பீட்டு மீளாய்வில்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடு என்ற வகையில் இலங்கையானது உங்களுடன் அனுபவங்களை  பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், மேலும் இரண்டு மீளாய்வுகளின் நிறைவில்  அனுபவங்களை பகிரும் வாய்ப்பு எமக்குக் கிட்டியமை பெரிதும் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஊழல் எதிர்ப்பு மற்றும் அபாயகர போதைபொருட்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான ஐநாவின் கிளை (UNODC)இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளமையையிட்டு எமது இதயபூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுக்கு அறிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன், எதிர்வரும் ஜூலை மாதம் ருNழுனுஊ மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் ட்ரான்ஸ் பெரன்சி இன்டர் நெசனல் (TISL) இணைந்து உலகலாவிய நிபுணர்களை உள்ளடக்கிய விசேட சந்திப்பொன்றினை இலங்;கையில் நடாத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனலாம். இது ஊழலுக்க எதிரான போராட்டத்தில் பிராந்தியத்தில் எமது பங்களிப்பினை வெளிப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான பயணத்திற்கும் வழிவகுக்கும் எனலாம். கௌரவ தலைவர் அவர்களே நாம் கடந்த  24 ஆண்டு காலப்பகுதியில் அடைந்திராத பல்வேறு சாதாணைகளை சமகாலத்தில் நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஊழலுக்கு எதிரான சட்டங்கள்,இலஞ்ச மற்றும் ஊழல்,ஆணைக்குழு சட்டம்,சொத்துக்கள் சட்டம் முதலானவற்றுக்கான திருத்தங்களை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை உலக வங்கி,UNODC முதலானவற்றின் பலசுற்று கலந்துரையாடல்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட வழிகாட்டல்களின் அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றோம். அவ்வகையில் அவ்வவமைப்புக்களுக்கு நாம் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும், இலங்கையின் அமைச்சரவையானது ஊழலுக்கு எதிரான தேசிய செயல்திட்டத்தினை தயாரிப்பதற்;கான அனுமதியினை ஆணைக்குழுவிற்கு  வழங்கியுள்ளது. அவ்வகையில் அது தொடர்பிலான தேசிய மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்,துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல்துறை சார்ந்தவர்களிடமும்; பரிந்துரைகளையும் ஆலோசணைகளையும் பெற்று ஊழலற்ற இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தேசிய செயல் திட்டமொன்றினை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளோம். இந்நிலைமையானது ஆரோக்கியமானதோர்  எதிரகாலத்திற்கு பெரிதும் பங்களிக்கும் எனலாம். கௌரவ தலைவர் அவர்களே ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் 2030 ஆம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சியே இன்றைய இவ் ஒன்றுகூடலின் எதிர்பார்ப்பாகும். பொதுமக்கள் நம்பிக்கைக் கோட்பாடு,சமத்துவம் முதலானவற்றை மேம்ப்படுத்துவதற்கும் தேசிய செல்வத்தை எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாப்பதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது. நான் ஏற்கனவே உங்களுக்கு கூறியதற்கிணங்க மாநாட்டின் குறிக்கோள்களை நிலைநாட்டவும்>தொடராக பின்பற்றவும்,பங்குபற்றலை ஊக்குவிக்கவும்பயனுள்ள வெளிநாடுகளின் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் திடசங்கற்பம் பூண்டுள்ளதோடு ஒத்துழைப்பின் அடிப்படையில் செயற்பட தயாரகவுள்ளதுடன் தொடர்ந்தும் சமவாயத்தின் அடிப்படையில்  எமது செயற்பாடுகளை முன்னெடுக்க தற்போது வழங்கப்படுவது போல் மென்மேலும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்திருக்கின்றோம். ஆர்வமேலீட்டுடன் செயற்படுகின்றோம். நன்றி கௌரவ தலைவர் அவர்களே   

un cs7

un cs7

un cs7

un cs7

un cs7

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search