கொழும்பில் உள்ள MOVEN PICK ஹோட்டலில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிககளுக்கான தேசிய கலந்துரையாடல் 2018 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி நடைபெற்றது.CIABOC இன் ஆணையாளர் திரு சந்திரனாத் நெவில் குருகே மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு.
சரத் ஜயமான்னஜனாதிபதி சட்டத்தரணி அவர்களின்ன் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இந்நிகழவில் பணிப்பாளர் நாயகம் அவர்கள் இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் தொடர்பில் அறிமுக குறிப்பினை வழங்கினார்.ஜப்பான் தனது அனுபவத்திலிருந்து உத்வேகம் பெற்றமை தொடர்பில் உதாரணங்களின் முன்வைப்புடன் நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலக ஜயசுந்தர தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். குழுக்களின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன இறுதியில் ஒவ்வொரு குழுக்களுக்கும் முன்வைப்புக்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டது. ஊழலை ஒழிப்பதில் சிவில் சமூகத்தினதும் ஊடகங்களினதும் பங்கு தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஊழலை ஒழிக்கவும் அதற்கு எதிரான கருத்தியலை சமுதாயத்தில் ஏற்படுத்தவும் ஊடக நிறுவனங்களின் பொறுப்புடைமை வலியுறுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.