தனியார் துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கான தேசியமட்ட கலந்துரையாடல் ஜூலை மாதம் 03 ஆம் திகதி திகதி கொழும்பில் உள்ள Moven Pick ஹோட்டலில் இடம்பெற்றது. பல வெளிநாட்டு பிரதிநிதிகளும், பல்வேறு நிறுவனங்களின் பிரதி நிதிகளும் இதில் பங்கேற்றனர்.CIABOC இன் பணிப்பாளர் நாயகம் திரு.
சரத் ஜயமான்ன அவர்கள், இலங்கையின் தற்போதைய சட்ட கட்டமைப்பை முன்னிலைப்படுத்தி முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் உரையாற்றினார். இலங்கையின் தொழிலாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம், திரு. கனிஷ்கா வீரசிங்க, தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் முன்முயற்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததுடன் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க, தனியார் துறைகளில் பின்பற்றப்பட வேண்டிய சிறந்த நடைமுறைகள் மற்றும் விதிகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். வெளிநாட்டு முதலீட்டு சூழலில் ஊழல் எதிர்ப்பு தொடர்பான நடலடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பெரிதும் முக்கியத்துவமளிக்கப்பட்ட நிலையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.