2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பு தாஜ்சமுத்ராவில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான சம்மேளனத்தில் கலந்து கொள்ள ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களினை பிரதிநிதித்தவப்படுத்தும் வகையிலான உலகலாவிய நிபுணர் குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அபாயகர போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிமனை (UNODC) மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) முதலான நிறுவனங்களுடன் இணைந்து மேற்படி சம்மேளனத்தை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) மேற்கொண்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இச்சம்மேளனத்தின் அங்குராற்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட கலந்துரையாடலினூடே, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஊழலுக்கு எதிரான அங்கத்துவ நாடுகளில் ஜகார்த்தா பிரகடன விதிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும், ஊழலுக்கு எதிரான நிறுவனங்களை பலமிக்கதாக மாற்றுவதனையும் இலக்காகக் கொண்டு இச்சமவாயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.