ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்திற்கான (EGM) அனைத்து ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன. உலகளாவிய நிபுணர் குழு கூட்டம் (EGM) கொழும்பு தாஜ்சமுத்ராவில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC)> ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அபாயகர போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிமனை (UNODC) மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) முதலான நிறுவனங்களுடன் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் சுமார் 30 நாடுகளிலிருந்தான ஊழலுக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நிறுவன நிபுணர்கள் ஊழலுக்கு எதிரான நிறுவனங்கள் தொடர்பில் ஜகார்த்தா பிரகடனம் முறைமைகளை கலந்தரையாடுகின்றனர். இந்த நிகழ்வானது ஜகார்த்தா பிரகடன விதிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும்> ஊழலுக்கு எதிரான நிறுவனங்களை பலமிக்கதாக மாற்றுவதற்கான கொழும்பின் பரிந்துரைகளுடன் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.