ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான உலகளாவிய நிபுணர் குழுவின் இரண்டாவது நாள் அமர்வானது கொழும்பு தாஜ்சமுத்ராவில் வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
உலகளாவிய நிபுணர்கள், ஜகார்த்தா பிரகடனத்தின் அடிப்படையில் ஊழலுக்கு எதிரான நிறுவனங்களின்சுயாதீனத்தை உறுதிப்படுத்து கொழும்பு பிரகடனத்தை உருவாக்க ஒன்றிணைந்துள்ளனர். இந்த நாள் நிகழ்வில் பிரேரணையின் உள்ளடக்கம், நியமனம், நிரந்தரத் தீர்வு,பதவி நீக்கம், பணி தொடர்ச்சி, ஒத்துழைப்பு, ஒழுக்கவியல் மற்றும் பயனுள்ள சுதந்திரத்தை அடைவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களின் தடுப்பு நிவாரண கோட்பாடு தொடர்பில் ஆக்கபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த நடைமுறைகள் மற்றும் சில குறைபாடுகள் தொடர்பான கருத்துக்கள் பரிசீலனைக்குற்படுத்தப்பட்டதுடன் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 3நாட்களின் நிறைவில் நீண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையிலான சிறப்பான முடிவுகளையும் இறுதி வரைவினையும் எதிர்பார்க்கலாம்.