இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் நேர்மைத்திறன் மிகு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தேசிய செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக கம்பஹா மாவட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான தடுப்பு நிவாரண விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் 2018 செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப 2.00 மணி வரையும், கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திரு. ரஞ்சித் லால் சில்வா, ஆணையாளர் திரு. நெவில் குருகே, பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் திரு சுனில் ஜயலத் உள்ளிட்ட அரச அலுவலர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது