நாடொன்றின் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான கொள்கைத்திட்டம் காணப்படுதல் வேண்டும். அக்கொள்கையானது திட்டமாக ஒட்டு மொத்த மக்களிடத்தும் வெளிப்படுத்தப்படல் வேண்டும். அச்சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்நிலைமையினை 2015இல் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் 2017 ஒக்டோபர் மாதமளவில் புரிந்து கொண்டமையின் வெளிப்பாட்டினால் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தினை தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சு உள்;ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து தேசிய செயற்பாட்டுத்திட்டத்தினை தயாரிப்பதற்காக சகல தரப்பினரும் உள்ளடங்கும் வகையில் மக்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் நாடளாவிய ரீதியி;ல் சுமார் 50 கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அதில் 04 சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசாங்க அதிகாரிகள், தொழில் சார் நிபுணர்கள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலிருந்தும் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கியதான இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது.
அவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்ற தேசிய செயற்பாட்டுத்திட்டம் வைபவரீதியாக உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு 2019 மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்விற்காக அதிமேதகு ஜனாதிபதி உள்ளிட்ட கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்த நிகழ்விற்காக நாட்டின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், அதிதிகள் சுமார் 1250 பேர் அழைக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் எமது நாட்டின் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான நான்கு முக்கிய உபாய மார்க்கங்களை அறிமுகம் செய்கின்றது.இந்த நான்கு உபாய மார்க்கங்களாவன தடுப்பு நிவாரணம், மனப்பாங்கு மாற்றம், புலனாய்வு மற்றும் சட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளை சிறப்பாக்க புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துதல் முதலானவையாகும்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கு மிகவும் அவசியமான விடயங்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட 04 கைந்நூல்கள் வரைவாக இச் செயற்பாட்டுத்திட்டத்துடன் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- அன்பளிப்பு விதிகள்
- முரண்பாட்டு ஆர்வ விதிகள்
iii. அரச அலுவலர்களுக்கான நேர்மைக் கைந்நூல்.
- இலஞ்சம், சொத்துக்கள், பொறுப்புக்கள், ஆணைக்குழு, தேர்தல் பிரசார நிதி, குரலெழுப்புவோர் தொடர்பான சட்ட வரைவு முன்மொழிவு.
அதன்படி, தேசிய செயற்பாட்டு திட்டத்தையும், மேலே உள்ள நான்கு கையேடுகளையும் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய செயற்பாட்டுத் திட்டம் மற்றும் 4 கையேடுகளும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, 15 புத்தகங்கள் வெளியிடப்படுவதற்கு தயார் நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணங்களின் உண்மையான உரிமையாளர்கள் கடந்த ஒருவருட காலமாக இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடல்களில் பங்கு பற்றி சமூகத்தினை குரலாய் ஆலோசணைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய மக்களே. எமது இலக்கு நேரிய பண்புகளுடைய சிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே. நேரிய பண்புகளுடன் இளம் தலைமுறையினரை வழிப்படுத்தி நேர்மையானதும் தூய்மையானதுமான அரச மற்றும் தனியார் துறையின் உருவாக்கத்திற்கும், நீதியை நிலைநாட்டும் சட்டத்தை மதிக்கும் சிறந்த முறைமையை ஏற்படுத்துவதாகும்.
எதிர்வரும் 5 ஆண்டுகளில் எமது நோக்கம் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கு ஐக்கியமாகவும், ஒத்துழைப்புடனும் ஒவ்வொருவரும் தமக்கு ஒப்படைக்கப்படடுள்ள பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றுவதனூடாக ஊழலற்ற இலங்கைத் தேசத்தை உருவாக்க ஒன்றிணைவதாகும்.
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு 2019 மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. அதன் மும்மொழிகளிலுமான பிரதிகளை www.ciaboc.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.