இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான பொது கணக்குகளில் சிறப்பான செயல்திறனை அடைந்த அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கள் விழாவில் ஆணைக்குழுவின் சார்பில் ஜனாதிபதியிடமிருந்து தங்க விருதைப் பெற்றுக் கொண்டார்.
பாராளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்படி தெரிவுகள் இடம்பெற்றதுடன்> குறித்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.