பொதுக் கணக்குக் குழுவின் சிறப்பு செலவின பிரிவின் கீழ் வரும் 838 நிறுவனங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இது அரச நிறுவனங்களின் பொது கணக்குகளில் சிறப்பான செயல்திறனை கருத்தில் கொண்டு பொதுக் கணக்குகள் குழுவால் செய்யப்பட்ட மதீப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் முதலிடத்திலும், கணக்காய்வாளர் திணைக்களம் இரண்டாவது இடத்திலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மூன்றாம் மூன்றாவது இடத்தினையும் சுவீகரித்துக் கொண்டன.
அரசாங்கத்தின் விஷேட செலவுப்பிரிவுகளான அமைச்சுக்கள், திணைக்கங்கள், மாவட்ட செயலகங்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் முதலானவை மதிப்பீட்டுக்கு உட்பட்டதுடன் அதில் 109 நிறுவனங்கள் விஷேட மதிப்பீட்டுக்கு உட்டபட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சக்களில் மேல்மாகாண பாரிய நகர அபிவிருத்தி அமைச்சும், திணைக்களங்களில் திறைசேறியும், மாவட்ட செயலகங்களுக்கிடையில் கம்பஹா மாவட்ட செயலகமும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவங்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜுலை மாதம் 5 ஆம் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான பொது கணக்குகளில் சிறப்பான செயல்திறனை அடைந்த அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கள் விழாவில் வைபவ ரீதியாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.