இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்க்கான ஆணைக்குழுவின் கல்வி நிவாரண பிரிவினால் நேர்மையான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை விழிப்புணர்வூட்டும் வகையிலான நிகழ்ச்சித்திட்டத் தொடரில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான நிகழ்ச்சி விக்னேஸ்வரா கல்லூரியில் 20.09.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் நண்பகல் வரை சிறப்பாக நடைபெற்றது.
பிரதிப்பணிப்பாளர் நாயகம் திருமதி எஸ்.ஐ. ஜயசிங்க, திரு. ஜெயந்தன் பிரதி கல்விப் பணிப்பாளர், East West முகாமைத்துவ அமைப்பின் திரு. மார்க், சட்டத்தரணி இந்திகா பெரேரா, திரு. எஸ்.எம். சப்ரி (உதவிப்பணிப்பாளர்- சட்டம்), திரு. முகம்மத் பிர்தவ்ஸ் (NILET), திரு. முகமது ரிஸ்வான் (NILET) மற்றும் திருமதி ஐ.எம். முரளிதரன் (அதிபர், விக்னேஸ்வரா கல்லூரி ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை கல்வி வலயத்தின் 15 தமிழ் மொழி மூல பாடசாலைகளிலிருந்து சுமார் 270 மாணவர்களும், 30 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன் திரு. முகமது பிர்தவ்ஸ், திரு. முகமது ரிஸ்வான் மற்றும் திரு. எஸ். எம். சப்ரி (ADL) ஆகியோரினால் குறித்த நிகழ்சியானது பார்வையாளர்களைக் கவரும் வகையிலான புதிய நுட்பங்களின் பிரயோகிப்புடன் தமிழ் மொழியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது அணியின் தலைவி திருமதி எஸ். ஐ. ஜயசிங்க (DDG) வரவேற்புரை நிகழ்த்தியதுடன், நிகழ்சித்திட்டத்தின் நோக்கத்தினை திரு. எஸ். எம். சப்ரி தெளிவுபடுத்தியதுடன், பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. ஜெயந்தனும் கூட்டத்தில் உரையாற்றி ஆணைக்குழுவின் ஏற்பாடுகளுக்கு நன்றியையும் பாராடடுதல்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து வளவாளர்களினால் புதிய நுட்பங்கள் மற்றும் பங்கேற்பு முறையைப் பயன்படுத்தி அமர்வின செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அமர்வின் நிறைவில் அனைத்து குழுக்களும் தங்கள் கருத்துக்களை முன்மொழிவாக சமர்ப்பித்தனர். நேர்மைக்குழுக்களை உருவாக்குவதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்கள் பொறுப்பாசிரியர்களுக்கு வழங்கப்பட்டதுடன் நன்றியுரையுடன் மேற்படி நிகழ்ச்சி மதியம் 12.15 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.