ஊடக வெளியீடு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - டிசம்பர் 09 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

இலஞ்சம் மற்றும் ஊழல் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது ஒரு நாட்டின் அபிவிருத்தி,முதலீடு,வர்த்தகம், நற்பெயர் மற்றும் சமூக நீதி முதலானவற்றி;ல் பல்வேறு சவால்களை ஏற்படுத்தவல்லது. உலகில் பாரதூரமான ஊழல் அச்சுறுத்தலில் இருந்து தங்களை விடுவிக்க நாடுகள் தனியாக செயல்பட முடியாது என்பதை உணர்ந்துஉலகின் பல நாடுகள் ஒன்றிணைந்து பல பரீட்சார்த்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அவ்வகையில் 186நாடுகள் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயம் மிகவும் முக்கியமானது. இந்த சமவாயத்தில் நாமும் 2004 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டு ஏற்றங்கீகரித்துள்ளோம்.

 

இச்சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து அங்கத்துவ நாடுகளும் கூட்டாக சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக டிசம்பர் 9ஆம் திகதியை பெயரிட்டுள்ளன. அதன்படி, டிசம்பர் 9ஆம் தேதியில் வரும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தன்று, உலகின் பெரும்பாலான அரசாங்கங்கள் செயற்றிறன்மிக்க வகையில்  ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் செயலகமாக விளங்கும் ஐ.நாவின். குற்றங்கள் மற்றும் அபாயகர போதைப்பொருள்கள் தொடர்பான பணியகம் (CIABOC) இந்த ஆண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிப்பதில் மக்கள் மயப்படுத்தப்பட்ட சமூக அடிப்படையிலான திட்டங்கள், ஊழல் எதிர்ப்பு பிரச்சாரங்கள்; மற்றும் ஊக்குவிப்புகள் என்ற கருப்பொருளின் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. முழு உலகத்துடனும் சேர்ந்து, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த ஆண்டு ஊழல் எதிர்ப்பு தினத்தினை பொது மக்;கள் விழிப்புணர்வு திட்டங்களைத் முன்னெடுப்பதில் தங்களுடைய ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

இலங்கையும் இலஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து நாட்டை மீட்க கடந்த காலங்களில் இருந்து பல்வேறு  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அவ்வகையில் ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் இலங்கையின் கேந்திர நிலையமாக விளங்கும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தனது அர்ப்பணிப்புக்களுடனான பல்வேறு சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தொடராக அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நம் நாட்டில் ஊழலை இல்லாதொழிப்பதற்கான பூர்வாங்க திட்டமொன்று எங்களிடம் இல்லாதிருந்தமையினால்; , ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் (ருNஊயுஊ) பரிந்துரைகள் மற்றும் 70 நாடுகளின் கூட்டமைப்பான திறந்த அரசாங்கங்களுக்கிடையிலான மாநாட்டின் பரிந்துரைகளின்படி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைமை தாங்கலுடன் இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம்; (2019-2023) 2019 மார்ச் மாதம் 18 ஆம் திகதி வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டம் எமது தேசத்திலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஒரு முக்கிய பொறிமுறையாக  தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் சேவையின் பணிகளை புத்தம் புதியதான முறைமைகளின் அறிமுகத்துடன்  நேர்மையான சேவையாக மாற்றுவதற்கான பல முன்மொழிகளை உள்ளடக்கியதாய் அமையப் பெற்றுள்ளதுடன், பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான பல்வேறு தடுப்பு நிவாரண நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக பரிணமிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அவ்வகையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் விளங்குகின்றது. விஷேடமாக தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினுள்ளடங்கும் 'விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான  கல்வி மற்றும் சமூக பங்களிப்பினை மேம்படுத்தல் எனும் உபாயமார்க்கம்  டீ இன் செயல்பாடுகளை மீட்டிப்பார்ப்;பதற்கும், அதன் இலக்குகளை எய்துவதற்கும்  இந்த நாள் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். இலங்கையின் தற்கால, எதிர்கால சந்ததியினரின் ஒழுக்க விழுமியங்களின் மேம்படுத்துகைக்கும் நற்பண்புகளுடனான எதிர்கால சந்ததியினரின் உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும் வகையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தினை தமது கொள்கையாக கொண்டு வீறுநடைபோடும் இலங்கை சமூகத்தின் உருவாக்கத்தினையே இவ்வருட சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் குறிக்கோளாக கொண்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு பரீட்சார்த்த நடவடிக்கைகளை முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முன்னெடுக்க திடசங்கற்;பம் பூண்டுள்ளது. எனவே இவ்விலக்கு நோக்கிய பயணத்தின் வெற்றிக்கு ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்களையும் ஊழலுக்கு எதிராக அணிதிரளச் செய்வதே எமது உன்னதமான எதிர்பார்ப்பும் விநயமான வேண்டுதலுமாகும்.

 

அதன் அடிப்படையில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்றிறன்மிக்கவர்களாக தயார்படுத்தும் வகையில் மக்களை விழிப்புணர்வூட்டும் ஏராளமான செயற்றிட்டங்கள் எமது ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 

 

 

குறிப்பாக சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை கொண்டாடும் இத்தருனத்தில்  இம்முறை எமது ஆணைக்குழுவானது பொதுமக்களை நாடிச்சென்று இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அணிதிரளும், இலஞ்சம் மற்றும் ஊழலை வெறுக்கும் சமுதாயத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளது. அவ்வகையில் மேற்படி இலக்கினை வெற்றிகரமாக்குவதற்காக புகையிரத பயணிகளை மையமாகக் கொண்டு பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பல செயற்றிட்டங்களை ஏராளமானோர் வந்து குவியும் அதாவது சுமார் மூன்றரை இலட்சம் பயணிகள் வந்து செல்லக் கூடிய  கோட்டை பிரதான புகையிரத நிலையம், மருதானை, பிரதம செயலக தரிப்பு நிலையம், பம்பலப்பிட்டிய, கொள்ளுப்பிட்டிய மற்றும் தெமடகொட புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாய் விழிப்பூட்டல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு ஆணைக்குழுவும், புகையிரத சேவைகள் திணைக்களமும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிகழ்வை 2019 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி மு.ப 6.00 மணிமுதல்  பி.ப 07.00 மணி வரையான காலப்பகுதியில் பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்விஷேட செயற்றிட்டத்தின் கேந்திர நிலையமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் விளங்குகின்றது.

 

 

2019.12.09 ஆம் திகதி அன்று முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத்திட்டங்கள்.

 

 1. 2019.12.09 ஆம் திகதி முழு நாளும் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களிலும், அண்மித்த பகுதிகளிலும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல். அதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவினதும், பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கிய விழிப்புணர்வூட்;டும் அலுவலர்கள் 500 பேர்களை ஈடுபடுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 2. கொழும்பு கோட்டை, கொழும்பு பிரதான பஸ் நிலையம், மருதானை புகையிரத நிலையம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பேருந்துகள், கார்கள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான ஊழல் எதிர்ப்பு வாசகங்களை உள்ளடக்கியதான ஸ்டிக்கர்களை ஒட்டுதல்.

iii.        கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தினுள் 2019.12.09 அன்றைய தினம் முழுவதிலும் வீதி நாட்டியங்களை (Street Dramas)  அரங்கேற்றல்.

 1. கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தின் முன் பகுதியில் நடமாடும் அரங்கினை ஏற்படுத்தி  குறு நாடகங்களை மேடையேற்றல்.
 2. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலைய வளாகத்திற்குள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஊழல் தடுப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தல்.
 3. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலைய வளாகங்களினுள் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கருப்பொருள்களைக் காண்பிக்கும் பதாகைகளை (Banners) காட்சிப்படுத்தல்.

vii.        கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தெரிவு செய்யப்;பட்ட ரயில் பயணிகளுடனான (சுமார் 1000) நேர்காணல்களை முன்னெடுத்தல்.

viii.       ஊழல் எதிர்ப்பு தொடர்பான கருப்பொருள்கள் அடங்கிய கேலிச்சித்திர புத்தகங்களை பயணிகளிடையே விநியோகித்தல்.

 1. ஊழல் எதிர்ப்பு தொடர்பான கருப்பொருளுடனான குறுஞ்செய்தியை கையடக்க தொலைபேசியூடாக பொதுமக்களுக்கு அனுப்புதல்.
 2. x. கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் நான்கு தெரிவு செய்யப்பட்ட புகையிரதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுக் குழுக்களை அனுப்பி வைத்தல்.
 3. xi. வெளி மாகாணங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வரும் 48 புகையிரதங்களின் எஞ்ஜினுக்கு முன் பகுதியிலும், அப்புகையிரதங்களின் முதல் காட்சிக் கூடத்தில் வெளி இரு பக்கங்களிலும் ஊழல் எதிர்ப்பு சுலோகங்களுடனான பதாகைகளை (Banners) காட்சிப்படுத்தல். 

xii.       தெரிவு செய்யப்பட்ட இரண்டு புகையிரதங்களின் காட்சிக் கூடங்கள் இரண்டினை சுலோகங்களின் காட்சிப்படுத்தலுக்காக பயன்படுத்தல்.

xiii.      தெரிவு செய்யப்பட்ட புகையிரதங்களின் காட்சிக் கூடங்களில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான வாசகங்கள், வீடியோக்களை காட்சிப்படுத்தல்.

xiv.    கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலைய வளாகத்திற்குள்; பொருத்தப்பட்டுள்ள LED திரைகளை பயன்படுத்தி  இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு வாசகங்கள், வீடியோக்கள், விளம்பரங்களை காட்சிப்படுத்தல்.

 1. xv. இந்த செயற்றிட்டத்தினை தழுவியதான விளம்பரங்களை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி காட்சிப்படுத்தல்.

xvi        கோட்டை பிரதான அரச மற்றும் தனியார் பஸ் தரிப்பு நிலையங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை முன்னெடுத்தல்.

xvii.      கொள்ளுப்பிட்டிய, பம்பலப்பிட்டிய, தெமடகொட மற்றும்  கொம்பனித் தெரு புகையிரத நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு துண்டுப் பிரசுர விநியோகக் குழுக்களை அனுப்புதல்.

 

நம்நாட்டில் பரவலடைந்துள்ள இலஞ்சம் மற்றும் ஊழலுடன் பிணைப்புற்ற  கலாசாரத்தை மாற்றுவதற்கு பொதுமக்களையும் அரசாங்க ஊழியர்களையும் உள்ளடக்கியதான ஒருங்கிணைந்த செயற்றிட்டமொன்றினை முன்னெடுக்க வேண்டும். ஒழுக்க விழுமியங்களையும், நேர்மைத்திறனையும் கொண்டதான முறைமைமை ஏற்படுத்துவதானது மக்களின் பங்களிப்பின்றி சாத்தியமாகாது. பொது மக்களை விழிப்பூட்டல் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு மாத்திரம் உரித்தான பணியல்ல என்பதுடன் அது அனைவரினதும் பொறுப்புமாகும். 

 

ஆதலினால், இச்செயற்பாட்டினூடாக ஊழலுக்கு எதிரான உரிமைக்கோரிக்கையை சமூகத்திற்கு வழங்குவது முக்கியமாகும்.

ஊழலுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக சமூக செயற்பாட்டை மேம்படுத்தும் வகையிலான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினால் முன்னெடுக்க முடியுமான கைங்கரியங்கள் ஒப்பற்றவை. எனவே, எமது தேசத்திலிருந்து  இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான செயற்றிறன்மிகு பொது மக்கள் விழிப்பூட்டலை முன்னெடுப்பதில் என்றென்றும் ஊடக நிறுவனங்களின்; மகத்தான பங்களிப்பை; எதிர்பார்க்கின்றோம்.

 

விஷேடமாக பின்வரும் விடயங்கள் தொடர்பில் :

 

 1. i. 2019 டிசம்பர் மாதம் 09ஆம் திகதி செயற்றிட்டத்தை மையமாகக் கொண்ட வெளிப்படுத்தல்களுக்கு உதவுதல்.
 2. 2019 டிசம்பர் மாதம் 09ஆம் திகதியின் முன்னரான செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டல்.

iii.        2019 டிசம்பர் மாதம் 09ஆம் திகதியின் பின்னரான காலப்பகுதியில் ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்களையும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அணிதிரளச் செய்யும் வகையிலான ஊடகப்பங்களிப்பை வழங்குதல்.

 

உங்கள் மகத்தான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

           

 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு,

இல 36, மலலசேகர மாவத்தை,

கொழும்பு 07.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search