2019 டிசம்பர் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் (UNCAC) 8 ஆவது அரச தரப்புக்களின் கூட்டத்தொடரில் ஜகார்த்தா கொள்கைகள் குறித்த கொழும்பு பிரகடனம் ஐ.நாவின். குற்றங்கள் மற்றும் அபாயகர போதைப்பொருள்கள் தொடர்பான பணியகத்தினால் (UNODC) வெளியீட்டு வைக்கப்படும். இந்த விஷேட நிகழ்வில்; CIABOC இன் பணிப்பாளர் நாயகம்> சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரம் மற்றும் செயல்திறன் குறித்த முன்வைப்பினை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பிரகடனத்தை தயாரிப்பதில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலுடன் இணைந்து UNODC ஏற்பாடு செய்த உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்தினை 2018 ஜூலை இல் நடாத்துவதில் இலங்கை முக்கிய பங்கு வகித்தமை மிகவும் மகிழ்ச்சியுடன் நினைவு கூறத்தக்கது.