2003 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு, டிசம்பர் 09 ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியதுடன், இந்த ஆண்டு "ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தலின் பிரதான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சுமார் 500 பாடசாலை மாணவர்கள், இளங்கலை பட்டதாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மின் இதழின் இரண்டாம் கட்டமும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
https://ciaboc.gov.lk/images/pdf/2023/E%20-%20mgazine%20-%202nd%20volume.pdf