KE - 3845
KE–3845 இலக்கமுடைய வாகனத்தை சுங்கத்திணைக்களத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டு வந்து போக்குவரத்து திணைக்களத்தின் கணிணித்தரவிற்கு போலியாக உற்படுத்தி, இலங்கை அரசிற்கு 2இ587இ500ஃ- ரூபாயிற்கு அதிகமாக நட்டம் ஏற்படுத்தியது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய உளவுத்துறை புலனாய்வு செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட வாகனம் நிதி நிறுவனமொன்றின் உரிமையில் இருந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் வழக்கிலக்கம் 98412/01/2023 அடிப்படையிலான நீதிமன்ற கட்டளையின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொறுப்பில் எடுத்து, சுங்க விசாரணைக்காக இலங்கை சுங்கத்திடம் 2023.08.29ம் திகதி மீள ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை, இவ்வாறு சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்ட 400இற்கும் அதிகமான வாகனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது திட்டமிட்ட வகையில் நீண்ட காலமாக இடம் பெற்று வருவதுடன், இதன் மூலமாக நாட்டிற்கு 05 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருவதுடன் அது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
HG – 5087
இந்த இலக்கத்தையுடைய லொறி ஒன்று 03.07.2003 அன்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர் அதே இலக்கத்திற்கு வாகனமொன்று இலங்கை சுங்கத்தின் ஊடாக (வாகன உதிரி பாகங்களில் மறைத்து) சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்புக்குள் 15.08.2022ம் திகதி உட்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யும் போது, சட்டப்படி பதிவு செய்யப்பட்ட லொரியின் தரவுகள் அகற்றப்பட்டு, HDJ101-0010931 என்ற எண் கொண்ட டொயோட்டா லேண்ட் குரூஷர் ரக ஜீப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணம் மற்றும் ஏனைய அரசாங்கக் கட்டணங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்பதுடன் சுமார் 10 மில்லியன் ரூபாய் நட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது.
GF - 8409
இந்த இலக்கத்தையுடைய ஒரு கார் 30.03.2002 அன்று முறையான நடைமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணைகளின் படி அது இராஜதந்திர நோக்கங்களுக்காக ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விவரங்கள் அழிக்கப்பட்டு, அந்த எண்ணின் கீழ் 28.07.2022 அன்று ஒரு Toyota Land Cruiser RMV வாகனம் தரவுத்தளத்தில் நுழைக்கப்பட்டு ஊழல் இடம்பெற்றள்ளது. சுங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க வரிகள் மற்றும் பிற வரிகள் தொடர்பாக இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. எனினும், இதனால் ஏற்பட்ட இழப்பு அண்ணளவாக ரூ. 10 மில்லியன் என அறிய முடிகிறது.
KA – 1141
இந்த எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் தரவு 04.07.2005 அன்று போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்டாலும், 18.12.2015 வரை இவ்வாகனம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பௌதீக ரீதியாகப் பதிவுசெய்யப்பட்டதாகவோ அல்லது வருவாய் உரிமம் பெற்றதாகவோ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவ்வாகனத்திற்கு முதலில் 08.01.2016 அன்று வருவாய் உரிமம் பெற்றுள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சுங்கத்தின் பதிவுகளுடன் தொடர்புடைய தகவல்கள் குறுக்கு சோதனை செய்யப்பட்டு, தரவுத்தளத்தில் இவ்வாகனம் உள்ளிடப்பட்ட இலக்கத்தின் தரவுகளை பரிசோதித்த போது அதன் கீழ் ரப்பர் சார்ந்த பொருட்கள் சுங்கத்தினால் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்க வரியாக ஏற்பட்ட இழப்பு குறித்து இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை, மேலும் சுமார் ரூ. 07 மில்லியன் நட்டமடைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.