இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய  செயற்பாட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறைகள் வடமாகாணம், வடமேல் மாகாணம் 2023

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆதரவுடன் “ஊழலற்ற நேர்மையான
தேசத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறைகளின் ஐந்தாவது நிகழ்வு வட மாகாணத்தையும் ஆறாவது நிகழ்வு வடமேல் மாகாணத்தையும் மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதனடிப்படையில் இதுவரையில் 06 மாகாணங்களில் இந்நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

நேர்மைத்திறனான அரச சேவையின் மூலம் நேர்மையான இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு நடைபெறும் இம்மூன்று நாள் வதிவிட பயிற்சிப்பட்டறைகள் மூலம், பயிற்றுவிப்பாளர்கள் (பிரதேச செயலாளர்கள்ஃ உதவிப் பிரதேச செயலாளர்கள்) மூலமாக தமது பிரதேசத்தினுள் இந்நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதுடன் அதன் மூலமாக இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான தேசத்தை உருவாக்குவதே எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாண பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறை நவம்பர் 25 முதல் 27 வரை யாழ்ப்பாணம், நோர்த் கேட் ஹோட்டலில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஆ.லு.சு.மு.

உடவெல அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் செல்வி. தனுஜா பண்டார மற்றும் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) திரு. எஸ்.எம்.சப்ரி, சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் ஆலோசகர் திரு. 

கௌரிதாசன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் தத்துவவியல் துறையின் பேராசிரியர் திரு. கஜவிந்தன் ஆகியோர் பங்குபற்றியதுடன் இந்நிகழ்வின் நெறியாள்கை தடுப்பு நிவாரண அதிகாரி திருமதி. உதேஷிகா ஜயசேகர அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

வடமேல் மாகாண பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறை டிசம்பர் 01 முதல் 03 வரை தம்புள்ளை, ஒக்ஸிடன்டல் பரடைஸ் ஹோட்டலில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னால் ஆணையாளர் திரு. சந்திர நிமல் வாகிஷ்ட மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஆ.லு.சு.மு. உடவெல அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் செல்வி. தனுஜா பண்டார, சட்டத்தரணி திரு. ஜகத் லியனாரச்சி, களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தரிந்து தனஞ்சய வீரசிங்ஹ, தொழில்முறைப் பயிற்றுவிப்பாளர் மற்றும் ஆலோசகர் சட்டத்தரணி திரு. மாலிக அமரசேகர மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எம்.எல்.கம்மன்பில ஆகியோர் பங்குபற்றினர். இந்நிகழ்விற்கு குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடமேல் மாகாண பிரதிச் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதேச செயலாளர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வின் நெறியாள்கை தடுப்பு நிவாரண அதிகாரி செல்வி. டீ.எம்.என்.கே. தென்னகோன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search