நவகத்தேகம பிரதேசத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் புதையல் தேடிய இரு சந்தேக நபர்களை கைது செய்ததன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக நவகத்தேகம பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் பதிரன என்பவருக்கு 200இ000.00 ரூபாய் இலஞ்சமாகக் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றங்களை குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்இ குறித்த சந்தேக நபருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ண மாரசிங்ஹ அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் 3 மாத இலகு சிறைத்தண்டனையூம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாகஇ குறித்த நபரால் வழங்கப்பட்ட 200இ000.00 ரூபாயை அரசுடைமையாக்கும் படி கட்டளையிடப்பட்டது.
இவ்வழக்கிற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவி;ன் உதவிப்பணிப்பாளர் நாயகம் துஷாரி தயாரத்ன ஆணைக்குழு சார்பில் ஆஜரானார்.