5000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கொலன்னாவ பிரதேச கிராம நிலதாரியொருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்றிற்கு அமைய, குறித்த குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் கணம் நீதிபதி அவர்களால் 2024.02.26 அன்று தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த நபருக்கு 4 குற்றங்களிற்கு, தலா ஒரு குற்றத்திற்கு 5 வருட தண்டனைக்காலம் படி தொடர்ச்சேரியான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அது 10 வருடங்களுக்க இடைநிறுத்தப்பட்டது. அதேவேளை, தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அபராதமாக ஐயாயிரம் (5000) ரூபாய் வீதம் இருபதாயிரம் (20000) ரூபாயும், அத்துடன் 1954ம் ஆண்டின் 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 26ம் அத்தியாயத்திற்கு அமைய 5000.00 ரூபாய் தண்டப்பணமாகவும் வசூலிக்கப்பட்டது.
இவ்வழக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்காக உதவிப்பணிப்பாளர் (சட்டம்) டயனா கொடிதுவக்கு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.