5000.00 ரூபாயை இலஞ்சமாக வழங்கியமை தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் குருவிதென்ன பிரதேசத்தின் சிவில் நபரொருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட ர்ஊடீ 248/2023 எனும் இலக்கமுடைய வழக்கிற்கு அமைய, குறித்த குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 2ம் இலக்க நீதிமன்றத்தின் கணம் நீதிபதி அமல் ரணராஜா அவர்களால் 2024.02.21 அன்று தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த நபருக்கு 5 வருடங்களுக்கு, இடைநிறுத்தப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அபராதமாக ஐயாயிரம் (5000) ரூபாய் வீதம் பத்தாயிரம் (10000) ரூபாயும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் இலகு சிறைத்தண்டணையும் விதித்து நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுது.
இவ்வழக்கானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்காக உதவிப்பணிப்பாளர் நாயகம் அனுராதா சிரிவர்தன அவர்கள் தலைமையில் நடைபெற்றது.