டயகம, டயகம பசார் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரின் வங்கியில் ஈடு வைக்கப்பட்ட காணி மற்றும் வீட்டினை ஏலத்திற்கு செல்வதை தடுத்து மானியம் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி 10,000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டமை மற்றும் பெற்றுக் கொண்டமை எனும் இரு குற்றச்சாட்டுக்களின் கீழ் தலவாக்கலை, லிதுலை ஆகரபதன கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக இலஞ்சச் சட்டத்தின் 19 (ஈ) பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2024.05.06 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் வழக்கிலக்கம் ளுஊடுயு 03/2015 இனை உடைய வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் இவ்வழக்கு மீணடும் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன், பிரதிவாதிக்கு எதிராக ஏலவே மேல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக்கப்பட்ட பிரதிவாதி அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததன் அடிப்படையில், வழக்கை மீள விசாரிக்குமாறு மேல் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் பணித்திருந்தது. அதனடிப்படையில் மீண்டும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் கொழும்பு 6ம் இலக்க மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மஞ்சுல திலகரத்ன அவர்களால் அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் இரண்டிற்கும் பிரதிவாதி குற்றவாளியாக்கப்பட்டார்.
அதனடிப்படையில் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 18 மாதம் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவை ஒரே தடவையில் நிறைவேற்றப்படல் வேண்டும். அத்துடன் ஒரு குற்றச்சாட்டிற்கு தலா 5000.00 ரூபா வீதம் 10000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக 10000.00 ரூபாய் வழங்கும்படியும் பணிக்கப்பட்டது.
இவ்வழக்கானது ஆணைக்குழு சார்பாக பிரதிப்பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்ஹ தலைமையில் நடைபெற்றதுடன், பிரதிவாதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி துலிந்த வீரசூரிய அவர்கள் பங்கேற்றார்கள்.