2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 2023 மற்றும் 2024 வருடங்களுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய உத்தியோகத்தர்கள் அடங்கிய நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது பார்வையிட முடியூம்.
இவைஇ அரச படிநிலை அட்டவணைப்படி மற்றும் குறித்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் விதத்தின் அடிப்படையில் இணையத்தளத்திற்கு உள்ளீடு செய்யப்படும்.
அத்துடன்இ குறித்த வெளிப்படுத்தல்களை இணையத்தளத்திற்கு உள்ளீடு செய்யூம் போது ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் 88 (1) உபபிரிவின் (அ) முதல் (உ) வரையான தகவல்களை உள்ளடக்க வேண்டாமென சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த ஏற்பாடுகளுக்கு உட்பட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களின் தொகுப்பாக்கம் செய்யப்பட்ட பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வெளிப்படுத்தல்களை hவவிள:ஃஃயனள.உயைடிழஉ.டமஃ எனும் இணையத்தள முகவரியின் ஊடாக பார்வையிட முடியூம் என்பதுடன்இ குறித்த தகவல்களை முறையற்ற விதத்தில் பாவிக்க வேண்டாம் என ஆணைக்குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது.