இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் இல்லாதொழிப்பதற்கான 'தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2029” இன் உருவாக்கத்துக்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரீட்சார்த்த முயற்சி மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது வரைக் காலமும் நடைமுறையில் இருந்த இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலைத் இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகவிருந்த நிலையில், அந்த திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை தயாரிக்கும் பணிகள் பரீட்சார்த்தமாக ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலைத் இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2023 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு இலங்கையில இருந்து ; இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான பொறிமுறையை வலுப்படுத்த அதிகாரமளிக்கிறது. அவ்வகையில் 'ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2025-2029” இனை தயாரிக்கவும், அதற்காக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளல் வேண்டும் என்றும் ஆணைக்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கு, அரச துறை, தனியார் துறை, சிவில் அமைப்புகள், வெகுஜன ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள், சிறுவர்கள், சமய தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த இலங்கை பிரஜைகளின் சார்பிலும் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 'ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2025-2029 தயாரிப்பதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மாகாண மற்றும் தேசிய ரீதியில் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கான தொடர் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் பரீட்சார்த வேலைத்திட்டம் வடமேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மேலும், மத்திய மாகாணம் மற்றும் வடமாகாணங்களில் கருத்துக்கள் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளும் செயலமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.