இலங்கை பெற்றௌலிய கூட்டுத்தாபனத்தில் வேலையொன்றை பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதனை 3 இலட்சம் வீதம் இரண்டு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியான நிலந்த எரிக் பெரேரா என்பருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ. ஆதித்ய படபெந்திகே என்பவரால் 2024.08.08 அன்று அபராதம் மற்றும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனடிப்படையில்இ தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5 வருடங்கள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்இ குற்றவாளி அபராதப்பணத்தை செலுத்தத்தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு வருட கால கடூழிய சிறைத்தண்டனையூம் விதிக்கப்பட்டது. அத்துடன்இ குற்றவாளியாக்கப்பட்ட நபர் பொதுத் தேர்தல் ஒன்றிலோஇ உள்ள+ராட்சித் தேர்தல் ஒன்றிலோ போட்டியிடவோஇ வாக்காளராகப் பதிவூ செய்யவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என இலஞ்ச சட்டத்தின் 29ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களால் உத்தரவிடப்பட்டது. அத்துடன் நீதிபதி அவர்களால் குற்றவாளி மீது திறந்த பிடியாணை விதிக்கப்பட்டு குற்றவாளி இலங்கைக்குள் உள் நுழையூம் போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும் போதோ கைது செய்யூமாறு குடிவரவூ மற்றும் குடியகல்வூ நிர்வாக பணிப்பாளர் நாயகத்திற்கு ஆணையிடப்பட்டது.
இவ்வழக்கானது இலஞ்ச சட்டத்தின் 20 ஆவது பிரிவின் (ஆ) (4) இன் கீழ் அரசாங்கத்தின் ஏதேனும் திணைக்களமொன்றிலோஇ அலுவலகமொன்றிலோ அல்லது ஏதேனும் நிறுவனமொன்றிலோ குறித்த வேலையொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக இலஞ்சம் பெறுதல் தொடர்பான குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பணிப்பாளர் (சட்டம்) அமா விஜேசிங்க அவர்களால் நெறிப்படுத்தப்பட்டது.