தேசிய தொலைக்காட்சி அலைவரிசையை செயற்கைக்கோள் தொழிநுட்பத்தின் ஊடாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒலிபரப்பு செய்வதற்காக பெறுகை நடைமுறைகளை பின்பற்றாமல் மற்றும் சட்டரீதியான ஒப்பந்தங்களை கைச்சாத்திடாமல்இ இத்தாலியில் செயற்படும் “நோவா விசன் சடலைட்” நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசிற்கு 3இ454இ279.37 ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னால் தவிசாளரான விமலசேன ரூபசிங்க மற்றும் முன்னால் பணிப்பாளர் நாயகமான தெல்வக்கட லியனகே சந்திரபால ஆகியோருக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு ஆணைக்குழுவினால் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
மேற்குறித்த வழக்கில்இ பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை கவனத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் 2024.01.05 அன்று பிரதிவாதிகளை விடுதலை செய்திருந்தது.
குறித்த மேல்நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி ஆணைக்குழுவினால் 2024.08.05 அன்று மீள்பரிசீலனை வழக்குத் தொடுக்கப்பட்டதுடன் 2024.08.07 அன்று அது தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவூ செய்துள்ளது. ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப் படுத்தி உதவிப்பணிப்பாளர் (சட்டம்) அனுசா சம்மந்தப்பெரும மற்றும் சட்ட உதவியாளர் கயா ராஜபக்ச ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தோற்றினர்.