இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” இனை தயாரிப்பதற்காக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தில் இளைஞர்களை மையப்படுத்தி இடம்பெற்ற நிகழ்ச்சியொன்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவூடன் 2024.08.23 அன்று ராமடியா ரன்மல் ஹோட்டலில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை நடைபெற்றது.
சமூக செயற்பாட்டாளர்களான இளைஞர்கள்இ பல்கலைக்கழக சமூகத்தினர் உள்;ளிட்ட இளைஞர்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டதுடன்இ இந்நிகழ்வில் இளைஞர்கள்இ யூவதிகள் என கிட்டத்தட்ட 50 பேர் பங்குபற்றினர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் சேத்திய குணசேகர மற்றும் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதுடன்இ உதவிப்பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார மற்றும் தடுப்பு நிவாரண அதிகாரிகளான விமுக்தி ஜயசூரியஇ எரங்கா மதூசி ஆகியோர் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.