மாதிவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றை அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வாடகை;கு எடுப்பதற்காக குத்தகைப்பணமாக 1இ980இ000.00 ரூபாயை அல்லது அதற்கு கிட்டிய தொகையை குறித்த வீட்டின் உரிமையாளருக்கு சட்ட விரோதமாக வழங்குவதற்கு தனது பதவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தி அபிவிருத்தி லொத்தர் சபையின் உறுப்பினர்களை தூண்டியதன் மூலம் 2018ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க மற்றும் 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1954ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் ஊழல் குற்றமொன்றில் ஈடுபட்டமை தொடர்பாக அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னால் தவிசாளரான சரண குணவர்தன என்பவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு 2022ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்திருந்தது.
மேற்குறித்த வழக்கில்இ பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை கவனத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளை விடுதலை செய்திருந்தது.
குறித்த மேல்நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி ஆணைக்குழுவினால் 2024.08.21 அன்று மீள்பரிசீலனை வழக்குத் தொடுக்கப்பட்டதுடன் 2024.08.29 அன்று அது தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவூ செய்துள்ளது. ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப் படுத்தி உதவிப்பணிப்பாளர் (சட்டம்) அனுசா சம்மந்தப்பெரும மற்றும் சட்ட உதவியாளர் சரண்யா ஜெயராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தோற்றினர்.