சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான மூன்றாவது மதிப்பாய்வூக்கு சமாந்தரமாக பதவி நிலை மட்டத்திலான கலந்துரையாடல்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதுடன்இ அது தொடர்பான விசேட சந்திப்பொன்று 2024.11.19 அன்று ஆணைக்குழுவின் தலைவர்இ ஆணையாளர்கள் உட்பட அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகவர்களின் பங்குபற்றுதலுடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு வளாகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான முறைமையை தாபிப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்இ உபாய வழிமுறைகளை திட்டமிடல்இ புதிய பணிப்பாளர் நாயகமொன்றை நியமித்தல் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான மறுசீரமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடு செய்வது பற்றியூம் கலந்துரையாடப்பட்டது.