இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, நாட்டிற்கு முறையாக இறக்குமதி செய்யப்பட்ட உண்மையான வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான ஆன்லைன் வசதி இலங்கை சுங்கத்தால் அங்குராற்பணம்

அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய சுங்க வரியை செலுத்தாமல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6,000 மோட்டார் வாகனங்கள் பாவணையில்; இருப்பது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பொய்யாக பதிவு செய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த வாகனங்களின்; இரண்டாவது அல்லது அடுத்தடுத்து வரும் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களையும் நெருக்கீடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இதற்கான தீர்வாக, வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன், அந்த வாகனத்திற்கான சரியான இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்துப் பட்டுள்ளனவா என்பதனை பரிசீலனைக்குற்படுத்தி சரிபார்த்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் ஒரு ஆன்லைன் போர்ட்டலைத் தயாரிக்க வேண்டும் என இலங்கை சுங்கத்திற்கு, ஆணைக்குழு பணிப்புரைவிடுத்ததன் பேரில் குறித்த ஆன்லைன் போர்ட்டலினை இலங்கை சுங்கம்; அறிமுகப்படுத்தியுள்ளது.

எந்தவொரு நபரும் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாகனம் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டு முறையாக சுங்க வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறியும் வாய்ப்பு பின்வரும் இணைப்பின் ஊடாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகினறோம்.

https://services.customs.gov.lk/vehicles

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search