சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான டிசம்பர் 09 ஆம் திகதியை மையமாகக் கொண்ட தேசிய நிகழ்ச்சித் திட்டமானது இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் 2024 டிசம்பர் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்தினை அங்குராற்பனம் செய்து உரை நிகழ்த்திய ஆணைக்குழுவின் கௌரவ தலைவர் அவர்கள் நோக்கங்களை விளக்கியதுடன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி உட்பட அதிதிகளை வரவேற்றார்.
இந்நாளில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவானது இந்நாளில் 'பெருமைமிக்க தேசத்தின் முன்னோடிகளாக நாங்கள் இருக்கிறோம்' என்ற மகுடம் சூடியுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மாண்புமிகு தலைவர் அவர்கள். இது இலங்கையில் ஊழலுக்கு எதிரான சவாலான போராட்டத்தில் ஒரு தனித்துவமான திருப்புமுனையாகும். அத்துடன் இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் வெற்றியானது அதனை திறம்பட செயல்படுத்துவதில் தங்கியுள்ளது என மேலும் குறிப்பிட்டார். குறித்த நோக்கத்திற்காக, ஆணைக்குழுவின் விரிவுபடுத்துதல், நிறுவன பொறிமுறையை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் புதிய கலாச்சாரத்தை வளர்ப்பது போன்றவை தொடர்பி;ல் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், இலங்கையை ஊழல் குறைந்த நாடாக மாற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அனைவருக்கும் நினைவூட்டினார். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை நடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், வலுவான சட்ட அமைப்பை உருவாக்க நேரிடும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் வலியுறுத்தியதுடன் இலஞ்ச ஊழலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே இலங்கையை இலஞ்சம் ஊழலற்ற நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலமே மக்களின் நம்பிக்கைக்கு உரிய பெறுமதியை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் விசேட உரையை கௌரவ உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு. யசந்த கோதாகொட நிகழ்த்தியதுடன் நாடளாவிய ரீதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 நேர்மைத்திறன் அலுவலர்களுக்கான நியமனப்பத்திரங்களும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.