நிர்வாக கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் CPA /13/2024 இலஞ்சம் மற்றும் ஊழல் பற

தெரனியகல பிரதேச செயலகத்தில் நிருவாக கிராம உத்தியோகத்தராகப் பணிபுரியும் போது மரப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் இலஞ்சம் கோரிப் பெற்றதற்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி குற்றப்பத்திரத்திற்கு எதரிhக பிரதிவாதிகள் தரப்பு தாக்கல் செய்த ஆரம்ப ஆட்சேபனையினை ஏற்று 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மேல்நீதிமன்ற நீதிபதி அவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்வதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மீளாய்வு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி மீளாய்வு மனுவின் மீதான விவாதத்திற்குப் பிறகு, அதை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து, மேல் நீதிமன்ற வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு மாண்புமிகு மேல் நீதிமன்ற நீதிபதிக்கு 2024 டிசம்பர் 20 அன்றைய தினம் உத்தரவிட்டது. முறைப்பாட்டாளர்கள் சார்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் திருமதி அனுஷா சம்மந்தப்பெரும (உதவிப் பணிப்பாளர் சட்டம்) திருமதி இஷிகா ரணதுங்க (உதவிப் பணிப்பாளர் சட்டம்) ஆகியோரும் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சான் கொடகும்புர மற்றும் சட்டத்தரணி ஷான் திசேரா ஆகியோர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search