இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் 2025ஆம் ஆண்டுக்கான பணிகள் இன்று (2025.01.01) காலை 8.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பமாக உரையாற்றிய பணிப்பாளர் நாயகம் திருமதி எம்.ஆர்.வை.கே. உடவெல, ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பரந்தளவிலான அதிகாரங்களுடன் கடமைகளை நிறைவேற்றுவதில் அனைத்து அதிகாரிகளினதும் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்பதனை வலியுறுத்தினார்.
அதன்பின், அனைத்து அதிகாரிகளும் நிகழ்நிலை மூலம் ஜனாதிபதி செயலகத்தின் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) நேரடி நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டனர். மேலும் தூய்மையான இலங்கை' திட்டத்தின் அரசாங்க ஊழியரகளின் சத்தியப்பிரமாணமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது ஆணைக்குழுவின் கௌரவ தலைவர் மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. எம். என். பி. இத்தவெல மற்றும் கௌரவ ஆணையாளர்களான சட்டத்தரணி கே.பி. ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சேத்தியா குணசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
வழமைபோன்று ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவு நலன்புரிச் சங்கத்தினால் புத்தாண்டு தேனீர் விருந்துபசாரம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.