2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் பிரகாரம் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, கௌரவ ஜனாதிபதி அவர்களின் 2025.01.08 ஆம் திகதியிடப்பட்ட நியமனக் கடிதத்தின்படி, மேல் நீதிமன்ற நீதிபதி திரு. ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம திஸாநாயக்க அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக 2025.01.10 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம திஸாநாயக்க 2000 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார் 2005 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக தனது கடமைகளை ஆரம்பித்த அவர்இ நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பணிபுரிந்துள்ளார், மேலும் 2018 இல் கொழும்பு பிரதான நீதவானாகவும் பணியாற்றியுள்ளார். 2020 ஆம் ஆண்டு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கும் முன்னர் பலப்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.