தெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு செயற்திட்டம் - சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம்

சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம் தெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு செயற்திட்டத்தின் கீழ் கடந்த அண்மையில் ஜனவரி 16 ஆம் திகதி ஆணைக்குழுவின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அங்குராற்பனம் செய்து வைக்கப்பட்டது. அரச துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிபதி W.M.N.P. இத்தவெல வரவேற்புரையாற்றியதுடன் தனது உரையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் பொதுத்துறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதிலும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த இலத்திரனியல் முறைமை இலங்கையின் தேசிய முன்னுரிமைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்துடன் இணைந்து பயணிக்கிறது என்பதனை வலியுறுத்தினார். இந்த முயற்சி 2025 ஜூனில் வரவிருக்கும் சர்வதேச நாணய நிதிய (IMF) கட்டமைப்பு அளவுகோலை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும் ஆதரிக்கிறது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் (ERD) உள்ளிட்ட திட்டத்தின் பங்காளர்களுக்கு நீதிபதி இத்தவெல நன்றி தெரிவித்தார்.

UNDP வதிவிட பிரதிநிதி திருமதி அசுஸா குபோட்டா மற்றும் ADB இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் திரு. தகாஃபுமி கடோனோ ஆகியோர், இந்தத் செயல்திட்டத்தை ஆதரிப்பதில் தங்கள் அமைப்புகளின் முக்கியப் பங்கு மற்றும் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுடன் அதன் ஒருங்கிணைப்பு குறித்துப் பேசினர். UNDP இன் கொள்கை நிபுணர் திருமதி சந்திரிகா கருணாரத்ன, பொதுத்துறை பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் ஊழலைக் குறைப்பதற்கும் இலத்திரனியல் முறைமையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்.

இந்தத் திட்டத்தின் முறையான ஆரம்பத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறப்பு நிகழ்வு குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்; திரு. R.S.A. திசாநாயக்கவின் கருத்துகளுடன் நிகழ்வு இனிதாய் நிறைவடைந்தது. அவர் அனுசரணையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இலங்கையின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும் இலத்திரனியல் முறைமையின முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த நிகழ்வு குழப்பங்குபற்றல் அமர்வோடு நிறைவடைந்தது, பங்கேற்பாளர்களுக்கு இந்த முயற்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பளித்தது. CIABOC, UNDP, மற்றும் ADB, ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தின் ஆரம்பமானது, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொதுத்துறையில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search