மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பிணை கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது

இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான மோட்டார் வாகனம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில், ர்பு – 5087 என்ற இலக்கத்தின் கீழ் முதலில் லொறி பதிவு செய்யப்பட்டதுடன் கடந்த 2022.08.15ஆம் திகதி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை அலுவலகம் சட்டவிரோதமான முறையில் ஜீப்பிற்கான பதிவு சான்றிதழை வழங்கியது. குறித்த பதிவுச் சான்றிதழை அங்கீகரித்து அச்சிடுவதற்காக அனுமதி வழங்கியமை தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 36333/1/25 இன் கீழ் 1997 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் 21 ஆவது பிரிவின் கீழ் முன்பிணை கோரிக்கை 22.01.2025 அன்று திறந்த நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டது. இரு தரப்பினரின் முனவைப்புக்களை பரிசீலித்த நீதிபதியினால் பிணை கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.

குறித்த வாகனம் ஏலவே கைப்பற்றப்பட்டு உரிய வரிகளை அறவிடுவதற்காக இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search